தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து மனுவை சங்கீதா திடீரென திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலவி வந்த பிரிந்து செல்லும் வதந்திகளுக்கு மத்தியில், சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தனது விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். இதன் விளைவாக நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.
ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, சங்கீதா வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். பிப்ரவரி 2026-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.