சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, தனது வருங்கால கணவரிடம் எதிர்பார்க்கும் குணங்கள் மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை மற்றும் வருங்கால துணை பற்றிய விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார். தனது பெற்றோர் சச்சின் மற்றும் அஞ்சலி டெண்டுல்கர் இடையே இருக்கும் ஆழமான நட்பைப் போலவே, தனது வாழ்க்கைத் துணையுடனும் ஒரு சிறந்த நட்புறவை ஏற்படுத்த விரும்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திருமணத்தைப் பொறுத்தவரை, சமூக அழுத்தத்திற்காகவோ அல்லது வயது காரணமாகவோ அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று சாரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இன்றைய தலைமுறையினர் தவறான உறவுகளில் சிக்கித் தவிப்பதை விட, அதிலிருந்து வெளியேறுவது புத்திசாலித்தனமானது என்றும் அவர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.