நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது உடல் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். முஸ்லிம் மணமகன் ஃபாஹத் அகமதுவை மணம் முடித்ததாலும், குழந்தை பிறந்ததாலும் தான் குண்டாகிவிட்டதாக வரும் விமர்சனங்களை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் ஒரு போட்காஸ்டில் உடல் ரீதியான விமர்சனங்கள் (Body Shaming) குறித்து மனம் திறந்து பேசினார். முஸ்லிம் சமூக ஆர்வலர் ஃபாஹத் அகமதுவை திருமணம் செய்ததாலும், குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்ததாலும் தான் 'குண்டாகியும், அழகி இல்லாமலும்' மாறிவிட்டதாக வரும் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அவர், 'என் வாழ்க்கை உங்கள் கண்களுக்காக ஓடிக்கொண்டிருக்கவில்லை, உங்களுக்கு செக்ஸி பெண்களைப் பார்க்க வேண்டுமென்றால் வேறு பக்கத்திற்குச் செல்லுங்கள்' என்று சாடினார். மேலும், தாய்மையின் போது பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்றும், செயற்கையான முறையில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.