கனடாவின் பிரின்ஸ் ஜார்ஜில் உள்ள ஒரு திரையரங்கிற்கு ஸ்பைடர்மேன் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் கிடைக்காததால், அங்கிருந்த ஊழியர் ஒருவரைத் தான் கையால் வரைந்து கொடுத்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு சினிப்ளெக்ஸ் திரையரங்கிற்கு 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் கிடைக்கவில்லை. இதனால் அந்தத் திரையரங்கின் விளம்பரப் பலகை காலியாக இருந்தது.
இதைச் சரிசெய்ய அந்தத் திரையரங்கின் ஊழியர் ஒருவர், 'ஸ்போடர்மேன்' (Spoderman) மீம் பாணியில் ஒரு போஸ்டரைத் தாமாகவே வரைந்தார். 'மன்னிக்கவும்! எங்களுக்கு அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் கிடைக்கவில்லை!' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தனித்துவமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தாமல், மனிதத் திறமையால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் பலரும் பாராட்டுகின்றனர். ரசிகர்கள் இந்த ஓவியத்தை மார்க்கெட்டிங் ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.