'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கி ஆதுரி, நடிகர் சூர்யாவின் கால்களைத் தொட்டு வணங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. இயக்குனர் வெங்கி ஆதுரி, நடிகர் சூர்யாவின் கால்களைத் தொட்டு வணங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சூர்யா மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, அவரை ஒருமுறை மேலே பார்க்கச் சொன்ன வெங்கி ஆதுரி, உடனடியாக சூர்யாவின் கால்களைத் தொட்டுத் தலைவணங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.