நடிகை அநுபமா பரமேஸ்வரன் தனது முந்தைய உறவில் சந்தித்த மனரீதியான பாதிப்புகளைப் பற்றி பேசியதைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இது அநுபமாவுக்கான பதிலா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

வீடியோ ஏற்றப்படுகிறது...

நடிகை அநுபமா பரமேஸ்வரன் தனது முந்தைய காதல் உறவில் சந்தித்த 'நார்சிசிஸ்டிக் அபியூஸ்' (Narcissistic Abuse) மற்றும் மனரீதியான அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது துணையின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், துருவ் விக்ரம் உடனான அவரது காதல் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

தற்போதைய விவாதங்களுக்கு துருவ் விக்ரம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, கடற்கரையில் அலைகள் மோதும் மற்றும் குழந்தைகள் விளையாடும் ஒரு அமைதியான வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பகிர்ந்துள்ளார். எந்தவிதமான வாசகங்களும் இன்றி அவர் பதிவிட்ட இந்த வீடியோ, விவாதங்களுக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதே தனது நிலைப்பாடு என்பதைக் குறிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருதுகின்றனர்.

அநுபமா தனது நேர்காணலில், தனது துணையின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்ததாகவும், தனது உடை மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் கூட அவர் அனுமதியுடன் மட்டுமே செய்யப்பட்டன என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது துருவ் விக்ரம் குறித்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.