மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டி வியட்நாமில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட அழகிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வியட்நாம் வந்துள்ளனர்.
வியட்நாமின் குவாங் நின் மாகாணத்தில் மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டி பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்க சுமார் 120 உலக அழகிகள் வியட்நாம் வந்து சேர்ந்துள்ளனர். இந்த நிகழ்வு வியட்நாமின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
குரோஷியாவின் ஏமா ஹெலினா விகார் உட்பட பல நாட்டு அழகிகள் வியட்நாம் வந்தடைந்து தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர். போட்டியாளர்கள் வியட்நாமின் பாரம்பரிய உடையான 'ஆவோ தாய்' (Ao Dai) அணிந்து அசத்தினர். அடுத்த ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை மற்றும் கலாச்சார போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.