தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கருத்திற்கு பதிலடி கொடுத்து விவாதத்தில் சிக்கியுள்ளார் நடிகர் யஷ். சினிமா ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
கே.ஜி.எஃப் புகழ் நடிகர் யஷ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளார். 'கே.ஜி.எஃப்-க்கு முன்னால் யஷ் யார்?' என்று அல்லு அரவிந்த் கேட்ட கேள்விக்கு, சினிமா என்பது ஒரு தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று யஷ் பதிலளித்தார்.
மேலும், தனது படத்தின் வெளியீடு தாமதமானதால் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், பணத்தை விட தரமான படைப்பு மற்றும் ரசிகர்களின் விருப்பமே முக்கியம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.