ஆவாராபன் 2 திரைப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, திஷா பதானி, பூரன் கப்பி, அனிருத் ராவல், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஆவாராபன் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளில் வெளியான முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இப்படம் தனது வலுவான வசூல் வேட்டையைத் தொடர்ந்துள்ளது.

இந்தியாவில் 'ஆவாராபன் 2' திரைப்படம் தனது முதல் ஞாயிறன்று நிகர வசூலாக (Net) ரூ. 69.60 கோடியும், ஒட்டுமொத்த வசூலாக (Gross) ரூ. 83.24 கோடியும் குவித்துள்ளது. நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் வரும் நாட்களிலும் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.