பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இந்துக்கள் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை புகழ் பெற்ற எழுத்தாளர் ஜாவேத் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜர்தாரியின் பழைய ஊழல் குறித்த நினைவூட்டலை அவர் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகவும், இந்தியாவை விட பாகிஸ்தானில் வாழ்வதையே இந்துக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜர்தாரியின் இந்த கருத்தை ஜாவேத் அக்தர் தனது எக்ஸ் (X) தளத்தின் மூலம் கடுமையாகச் சாடினார். 'பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, 10 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட அனைவரிடமும் எப்போதும் உணர்ச்சியற்றவராகவே இருந்து வருகிறார்' என்று அவர் கிண்டல் செய்துள்ளார்.

ஜாவேத் அக்தர் ஜர்தாரியின் பழைய 'மிஸ்டர் 10 பெர்சன்ட்' என்ற பெயரை நினைவுபடுத்தினார். 1980 மற்றும் 1990களில் அரசுத் திட்டங்களில் 10 சதவீத கமிஷன் வாங்கியதாக ஜர்தாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்க.