பிரபல நடிகை அனன்யா ராஜ் தனது 27வது வயதில் காலமானார். அவர் கடந்த சில காலமாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில், 'கோஸ்ட்' திரைப்பட புகழ் இளம் நடிகை அனன்யா ராஜ் தனது 27வது வயதில் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனன்யாவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவர் கடந்த சில நாட்களாக கடுமையான மன மற்றும் உடல் நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்துள்ளார். அவர் தூங்கிக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.