பேபால் நிறுவனத்தின் புதிய சிஇஓ என்ரிக் லோரஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் வேளையில், ஸ்டிரைப் மற்றும் அட்வென்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஃபின்டெக் நிறுவனமான பேபாலினை ஸ்டிரைப் மற்றும் அட்வென்ட் ஆகிய நிறுவனங்கள் வாங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வால் ஸ்டிரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, ஒரு பங்கிற்கு 60.50 டாலர் என்ற அடிப்படையில் 53 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேபால் நிறுவனம் இதற்கு முன் இந்தத் திட்டத்தை நிராகரித்தாலும், தற்போது பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

புதிய சிஇஓ என்ரிக் லோரஸ், பேபால் நிறுவனத்தை மீண்டும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றவும், அதன் செயல்பாட்டு மாதிரிகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை 20% குறைப்பதற்கான செலவுக் குறைப்புத் திட்டத்தையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.