செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்திப் பரப்பப்படும் போலி வீடியோக்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரச்சாரக் கணக்குகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் மற்றும் பிரதமர் மோடியின் போலி AI வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது.
PIB ஃபேக்ட் செக் ஆய்வில், பாகிஸ்தான் பிரச்சாரக் கணக்குகள் மாணவர் போராட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்த இந்த போலி வீடியோக்களைப் பரப்பியதைக் கண்டறிந்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.