ஜப்பானின் கியூஷு பகுதியில் 7.1 ரக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, ஒரு வணிக வளாகத்தில் பலர் சிக்கியிருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் கியூஷு பகுதியில் ஏற்பட்ட 7.1 ரக நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குமாமோட்டோ காவல்துறையின் தகவல்படி, ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் படையினர் சிக்கியவர்களை மீட்க போராடி வருகின்றனர். மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.