30 வயதிற்குப் பிறகு கருத்தரிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி நிபுணர் மருத்துவர் விளக்குகிறார். சரியான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ முறைகள் மூலம் பாதுகாப்பான கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.

தற்போதைய சூழலில் பல பெண்கள் தொழில்முறை காரணங்களுக்காக அல்லது தாமதமான திருமணத்தினால் 30 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிணிக்கத் திட்டமிடுகின்றனர். வயது அதிகரிக்கும் போது கருவுறுதல் திறன் (Fertility) குறையத் தொடங்குவதை புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு கருமுட்டைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி, மன அழுத்தம் தவிர்த்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை மிக முக்கியமானவை. மேலும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் 6 முதல் 12 மாதங்களாக முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்றால், உடனடியாக ஒரு கருவுறுதல் நிபுணரை அணுகுவது நல்லது. தற்போது IVF மற்றும் IUI போன்ற நவீன மருத்துவ முறைகள் மூலம் எளிதாகக் குழந்தை பெற முடியும்.