ஆப்பிரிக்காவின் கானாவிலிருந்து கொல்கத்தா வந்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த உலோக ஆணி, ஒரு தனியார் மருத்துவமனையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஆப்பிரிக்காவின் கானாவில் சிறு வயதில் எலும்பு அறுவை சிகிச்சையின் போது பொருத்தப்பட்ட உலோக ஆணி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ந்து வயிற்றுப் பகுதிக்கு வந்திருந்தது. இது சிறுநீரக மற்றும் முக்கிய இரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவானது.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவர்கள் ரோபோட்டிக் உதவியுடன் கூடிய நுணுக்கமான அறுவை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தனர். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் துல்லியமான கட்டுப்பாட்டினால், முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் அந்த ஆணி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே அந்தப் பெண் குணமடைந்து வீடு திரும்பினார்.