மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'கேண்டிடா ஆரிஸ்' (Candida auris) என்ற பூஞ்சை தொற்று அமெரிக்காவில் பரவி வருகிறது. இதில் டெக்சாஸ் மாநிலம் அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் 6,600-க்கும் மேற்பட்ட கேண்டிடா ஆரிஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் டெக்சாஸ் 1,148 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த பூஞ்சை தொற்று மருத்துவமனைகளில் எளிதாகப் பரவுகிறது மற்றும் பல மருந்துகளுக்குக் கட்டுப்படாதது என்பதால் இது மிகவும் ஆபத்தானது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். கைகளை முறையாகக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இதைப் தடுக்க முடியும் என்று சிடிசி (CDC) தெரிவித்துள்ளது.