கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயதான ரபிந்திரநாத் சர்க்கார், உயிர்வாழ்வதற்காக தினமும் 16 மணிநேரம் டாக்ஸி ஓட்டி வருகிறார். டிஜிட்டல் கிரியேட்டர்வைதாலி போஸின் வீடியோ மூலம் அவரது வறுமை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒவ்வொரு காலையிலும் 6 மணிக்கு, 80 வயதான ரபிந்திரநாத் சர்க்கார் கொல்கத்தாவின் சாலைகளில் வாடகை டாக்ஸியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். இரவு 10 அல்லது 11 மணி அளவில் அவர் வீடு திரும்புகிறார், இது சுமார் 16 மணிநேர கடின உழைப்பைக் குறிக்கிறது. கடந்த 52 ஆண்டுகளாக அவர் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
அவர் வாடகை டாக்ஸியை பயன்படுத்துவதால், வருமானம் எவ்வளவு இருந்தாலும் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அதோடு எரிபொருளுக்கான செலவையும் அவரே ஏற்க வேண்டும். இதனால் மீதமுள்ள பணத்தைக் கொண்டு மருந்து கூட வாங்க முடியாத நிலை அவருக்கு உள்ளது. Dumdum அருகே தனது 77 வயது மனைவியுடன் அவர் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர்களின் வீட்டின் கூரை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
டிஜிட்டல் கிரியேட்டர் சைதாலி போஸ் பகிர்ந்துள்ள வீடியோவில், உடல்நலக்குறைவு மற்றும் நடுக்கத்துடன் அவர் வாகனம் ஓட்டுவது காணப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பலர் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்.