ரயில் நிலைய குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா இருப்பது சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 20,000 இடங்களில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவ ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தைப் பற்றிய சிஏஜி (CAG) அறிக்கையில், மும்பை, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பயணிகளின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டி, 20,000 இடங்களில் புதிய நீர் சுத்திகரிப்பு மற்றும் 'டேங்க் டூ டாப்' கண்காணிப்பு முறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். பழைய தண்ணீர் தொட்டிகள் மாற்றப்பட்டு, நீர் தரம் முறையாக பரிசோதிக்கப்படும்.
மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை மூலம் நீரின் தரம் கண்காணிக்கப்படும் என்றும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அவ்வப்போது தர அறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.