அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக இந்த நான்கு பாலங்களும் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த பழைய பாலங்களுக்குப் பதிலாக புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. நகரின் போக்குவரத்துச் சீராக இயங்க 4 புதிய மேம்பாலங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 112 ஆண்டுகள் பழமையான எல்பின்ஸ்டோன் பாலம் அகற்றப்பட்டு, மும்பையின் முதல் இரட்டைக் அடுக்கு (double-decker) சாலை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.