ஈரானின் பல்வேறு நகரங்களில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. அதே நேரத்தில், ஹூதிகளின் கடல் வழித் தடைகளை மீறி சீன எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்கின்றன.

அமெரிக்காவின் மத்திய கட்டளை (CENTCOM) ஈரானின் இராணுவத் தலைமையகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மீதுத் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை ஈரானின் பல்வேறு நகரங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அஹ்வாஸ் மற்றும் பண்டார் அப்பாஸ் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

கடல் வழிப் போக்குவரத்தில் பெரும் இடையூறுகள் நிலவி வரும் நிலையில், லண்டன் பங்குச் சந்தை குழுவின் தரவுகளின்படி, சவூதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இரண்டு சீன சூப்பர் டேங்கர்கள் ஹூதிகளின் கடல் வழித் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாகப் பயணித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் பிரம்மாண்டமான தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.