ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் உக்ரைன் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், பேட்ரியாட் ஏவுகணைகளைச் சேமித்து வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி தனது நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் தீவிரத் தாக்குதலில் உக்ரைனின் விமானத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் பெரும் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதுகாப்புத் தேவைகளை வலியுறுத்திப் பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, மேற்கத்திய நாடுகளின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். பேட்ரியாட் ஏவுகணை கையிருப்புடன் வெறும் பார்வையாளர்களாக இருக்காமல், அவற்றை உடனடியாக உக்ரைனுக்குத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.