வட கொரியாவில் நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக, மக்கள் நாய் இறைச்சியால் செய்யப்பட்ட பாரம்பரிய சூப்பைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது உடல் வலிமைக்கும் வெப்பத் தாக்கத்தைத் தவிர்க்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
வட கொரியாவில் கடும் வெப்ப அலை தாள்ளும் நிலையில், ஒரு விசித்திரமான ஆலோசனையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்களின் இறைச்சியால் செய்யப்பட்ட பாரம்பரிய சூப்பைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அரசு இதழான 'ரோடாங் சின்முன்' வெளியிட்ட ஒரு மருத்துவரின் நேர்காணலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கொரிய மொழியில் இந்த உணவை 'டாங்கோகி குக்' என்று அழைக்கிறார்கள், இதன் பொருள் 'இனிப்பான இறைச்சி சூப்' என்பதாகும். இந்த சூப் உடலுக்கு ஆற்றலைத் தருவதாகவும், வெப்பத் தாக்கத்திலிருந்து (Heat Stroke) பாதுகாப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது இதய நோய், நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கும் நல்லது என்று நம்பப்படுகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இந்த உணவு மிகவும் பிடிக்கும் என்றும், அரசு விருந்துகளில் இது பரிமாறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மருத்துவக் கூற்றுகளுக்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.