சீன அறிஞர் இயாங் ஜுஹே, கிறிஸ்டோபர் நோலன் உடனான தனது தத்துவார்த்த நேர்காணல் மூலம் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது கேள்விகள் மேற்கத்திய கலாச்சார வீழ்ச்சி குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளன.

பாஸ்டன் கல்லூரியில் அரசியல் தத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் இயாங் ஜுஹே, ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுடன் நடத்திய நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் நோலனிடம் கேட்ட ஆழமான தத்துவக் கேள்விகள், குறிப்பாக நாகரிகங்களின் வீழ்ச்சி குறித்த அவரது கருத்துக்கள், அமெரிக்கர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

சீனாவில் ஏற்கனவே புகழ்பெற்ற ஒரு அறிவுஜீவியான ஜுஹே, மேற்கத்திய கல்வி முறையிலேயே பயின்றவர். அவரது கேள்விகள் அமெரிக்கப் பழமைவாத சிந்தனைகளோடு ஒத்துப்போவதால், இது ஒரு அரசியல் ரீதியான விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர் இதனைப் பாராட்டியுள்ள நிலையில், சிலர் இதனைப் அரசியல் ரீதியாகப் பார்க்கின்றனர்.