நேட்டோ உச்சிமாநாட்டின் போது டிரம்ப் தங்கியிருந்த இடத்தைப் பற்றி ஈரான் தெரிந்து வைத்திருந்தது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஏவுகணை அச்சுறுத்தலால் அவர் வழக்கமான விமானத்திற்குப் பதிலாக ரகசியமாக மற்றொரு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்கள் ஈரானிடம் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது விமானத்தை இலக்கு வைக்கும் ஏவுகணை அச்சுறுத்தல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, டிரம்ப் வழக்கமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்திற்குப் பதிலாக ஒரு ரகசிய இராணுவ விமானத்தில் (ஏர் ஃபோர்ஸ் C32A) அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு உணவு விநியோக லாரி மூலம் ரகசியமாக மாற்றப்பட்ட இந்த நடவடிக்கை, ஊடகங்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கே தெரியாமல் மிகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.