இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மிகப்பெரிய உளவுத்துறை மாற்றத்தை நோக்கி நகர்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நவீன உளவு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மிகப்பெரிய உளவுத்துறை மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசாங்கம் தனக்கென ஒரு நவீன உளவு அமைப்பை அல்லது ஸ்பை நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது.

இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக ஜப்பான் கடைப்பிடித்து வந்த போர்-பிந்தைய எச்சரிக்கை கொள்கையிலிருந்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.