பிரான்சில் சுற்றுலாத் தலங்களில் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது, ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

பிரான்சின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கேப் ஃபெரெட் தீபகற்பத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் இப்பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

போர்டோவிற்கு மேற்கே உள்ள சுற்றுலாத் தலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஜிரோண்ட் பிராந்தியத்தில் பல நாட்களாகத் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்பெயினின் பல பகுதிகளில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி பரவுவதால் அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.