ஸ்பெயின் மற்றும் பிரான்சில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் தீவிரம் மற்றும் கணிக்க முடியாத தன்மை சூழலை மிகவும் மோசமாக்கியுள்ளது.
ஸ்பெயின் மற்றும் பிரான்சில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயின் வேகம் மற்றும் அதன் கணிக்க முடியாத தன்மை காரணமாக, பாதுகாப்பு கருதி 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
பிரான்சின் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் தீ பரவியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்து தப்பியோடி வருகின்றனர். ஸ்பெயினிலும் தீயின் தீவிரத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.