ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் மிரட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்களை வெளியேறத் தயாராக இருக்குமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது 'மிகவும் கடுமையாக' நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்கப் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்தில் மோதல் தீவிரமடைந்தால், உடனடியாகப் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருக்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் தூதரகங்கள் பயண அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளன.