ஹார்முஸ் நீரிச்சலை மீண்டும் திறப்பது குறித்த ட்ரம்ப்பின் ஒப்பந்தக் கோரிக்கையை ஈரான் மறுத்துள்ளது. ஓமனுடன் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிச்சலை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தக் கோரிக்கையைத் தெஹ்ரான் முற்றிலும் மறுத்துள்ளது.
இருப்பினும், ஹார்முஸ் நீரிச்சலுக்கான ஒரு பரஸ்பர வழிமுறையை உருவாக்குவது குறித்து ஓமனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.