பாகிஸ்தான் தனது பீரங்கித் திறனை அதிகரிக்க இந்திய எல்லையில் 250 சீனத் தயாரிப்பு SH-15 தானியங்கி பீரங்கிகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. இது எல்லைப் பகுதியில் ராணுவச் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்கு அருகில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் 250 சீனத் தயாரிப்பு SH-15 டிரக்-மவுண்டட் தானியங்கி பீரங்கிகளை நிலைநிறுத்தியுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 155மிமீ பீரங்கிகள் 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவு வரை இலக்குகளைத் தாக்கக்கூடியவை.

சீனாவின் NORINCO நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த பீரங்கிகள் அதிவேகமாகச் செயல்படும் திறன் கொண்டவை. இவை 6x6 கவச வாகனங்களின் மீது அமைக்கப்பட்டவை மற்றும் மிகக் குறுகிய காலத்தில் இலக்குகளைத் தாக்க வல்லவை. சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆழமான பாதுகாப்பு உறவை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.