ஸ்பெயினின் அகதிகள் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள, சட்டவிரோத அகதிகள் பிரிட்டனில் இருந்து ஸ்பெயினுக்குக் கடத்தப்படுவதாக டெலிகிராப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. லாரிகளில் மறைத்து வைத்து இவர்கள் கடத்தப்படுகிறார்கள்.
ஸ்பெயின் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த அகதிகளுக்கு வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், சட்டவிரோத அகதிகள் பிரிட்டனில் இருந்து ஸ்பெயினுக்குக் கடத்தப்படுவதாக டெலிகிராப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பலவீனமான எல்லைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, லாரிகளில் அகதிகளை மறைத்து வைத்து பிரான்ஸ் வழியாக ஸ்பெயினுக்குக் கடத்துகிறார்கள் கடத்தல்காரர்கள்.
விசா காலாவதியான அல்லது சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் உள்ள அகதிகள், ஐரோப்பாவிற்குள் சுதந்திரமாகச் செல்ல இந்தத் திட்டத்திற்காக சுமார் £1,000 வரை செலவு செய்கிறார்கள். மேலும், பிரான்ஸ் வழியாக ஸ்பெயின் எல்லை வரை அழைத்துச் செல்ல கூடுதல் £500 'டாக்ஸி சேவை' கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இந்த கடத்தல் சேவைகள் சுற்றுலா விளம்பரங்களைப் போலக் காட்டப்படுகின்றன. குறிப்பாக இந்திய மாணவிசா காலாவதியானவர்கள் மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து இந்த விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. பிரிட்டனின் கடுமையான விசா விதிகளிலிருந்து தப்பிக்க இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது.