சீனா தனது புதிய வான்வழி அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணையின் தாக்குதல் வரம்பிற்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் வந்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனா தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில், விண்ணில் இருந்து ஏவக்கூடிய அதிநவீன அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சீனாவின் எச்-6என் (H-6N) ரக குண்டுவீச்சு விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடியது என்றும், இதன் மூலம் இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் எளிதாக தாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய ஏவுகணையின் வருகை தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த ஏவுகணை, எல்லைப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.