ஈரானின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதைத் தொடர்ந்து, உயிர்வாழத் துடிக்கும் பெண்கள் தங்கள் கூந்தலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பணவீக்கம் 87 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணவீக்க விகிதம் 87 சதவீதத்தைத் தாண்டியுள்ளதால், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், உணவுக்காகப் போராடும் பெண்கள் தங்கள் கூந்தலை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க ஆடைகள் மற்றும் பிற பொருட்களைக் கூட விற்கும் சூழல் உருவாகியுள்ளது.