தெற்கு சிரியாவில் இஸ்ரேலியப் படைகள் இரசாயனங்கள், புல்டோசர்கள் மற்றும் கைது நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனர். இது சிரியாவின் உணவுப் பஞ்சத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

தெற்கு சிரியாவில் இஸ்ரேலியப் படைகள் விவசாயிகளை அவர்களின் நிலங்களிலிருந்து தடுக்க இரசாயனப் பயன்பாடு, புல்டோசர் மூலம் நிலங்களைச் சமப்படுத்துதல் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

தற்போது சிரியாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். சர்வதேச உதவிப் பொதிகள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது. அல் ஜசீராவின் அறிக்கை இந்தத் துயரமான நிலையை உறுதிப்படுத்துகிறது.