டொனால்ட் டிரம்பின் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான வைட் ஹவுஸ் பால்ரூம் திட்டத்திற்கு அமெரிக்க ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரான்ஸ் அனுமதி இன்றி நிர்வாகம் இத்தகைய மாற்றங்களை செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்பின் லட்சியமான வைட் ஹவுஸ் பால்ரூம் திட்டத்திற்குத் தடை விதித்துள்ளது. கிழக்குப்பகுதியை (East Wing) இடித்துவிட்டு, சுமார் 400 மில்லியன் டாலர் செலவில் ஒரு பிரம்மாண்டமான பால்ரூமை கட்டும் திட்டத்திற்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
'ஒவ்வொரு அதிபரும் வைட் ஹவுஸின் தற்காலிக வாடகைதாரரே தவிர, உரிமையாளர் அல்ல' என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸின் ஒப்புதல் இன்றி நிர்வாகத் துறை இத்தகைய பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் திட்டம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நிர்வாகம் முடிவு செய்துள்ளது.