ரஷ்யாவின் யேகாடெரின்பர்க்கில் உள்ள வைல்ட்பெரீஸ் நிறுவனத்தின் கிடங்கின் மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல் திறனை வெளிப்படுத்தியுள்ளது. எல்லையிலிருந்து சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ள யேகாடெரின்பர்க் நகரில் உள்ள வைல்ட்பெரீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கிடங்கின் மீது உக்ரைன் ட்ரோன்கள் துல்லியமாகத் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் கிடங்கின் கூரை மீது விழுந்ததால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அங்கு பணியாற்றிய 800 ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களில் மட்டும் வைல்ட்பெரீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட தளங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.