அலாஸ்கா கடலில் எரிபொருள் தீர்ந்து தவித்த ஒரு சிறிய படகிற்கு உதவி கோரி அழைத்தபோது, மார்க் ஜுக்கர்பெர்க்கின் பிரம்மாண்டமான 'லாஞ்ச்பேட்' யாட் கப்பல் எந்த பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு பழைய சுற்றுலாப் படகு அந்தப் படகைக் காப்பாற்றியது.

மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் 387 அடி நீளமுள்ள 'லாஞ்ச்பேட்' என்ற மெகா யாட், அலாஸ்கா கடலில் சிக்கியிருந்த ஒரு சிறிய படகின் உதவி அழைப்பைப் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது. கோஸ்ட் கார்டு தகவல்படி, எரிபொருள் தீர்ந்து போன 21 அடி நீள சிறிய படகு உதவி கோரியபோது, ஜுக்கர்பெர்க்கின் கோடிக்கணக்கான மதிப்புள்ள யாட் அருகில் இருந்தும் ரேடியோ அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை.

'வைல்ட்ரன்லெஸ் லெகசி' என்ற 42 ஆண்டுகள் பழமையான சுற்றுலாப் படகுதான் அந்தச் சிறிய படகைக் காப்பாற்றியது. ஜுக்கர்பெர்க்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர்கள் வேறு ஒரு ரேடியோ சேனலில் இருந்ததால் இந்தத் தகவல் தெரியவில்லை என்றும், மீட்புப் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டபோதுதான் இதை அறிந்ததாகவும் விளக்கமளித்துள்ளார். கடல்சார் சட்டங்களின்படி, ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது ஒவ்வொரு கப்பலின் கடமையாகும்.