டோக்கியோவிற்கு கிழக்கே உள்ள சிபா பகுதியில் பெய்த record மழையினால் சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் போதிய வசதியின்றி தவிப்பகின்றனர்.

ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் சாலைகளும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் மாயமடைந்துள்ளார். சிபா நகரில் ஒரு மணி நேரத்தில் 11.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது ஒரு புதிய சாதனையாகும்.

ரயில்கள் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நரிதா விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டனர். சுமார் 2,30,000 குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.