ஹோட்டல் கீ கார்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு பாட்டிக்கு அவரது பேத்தி கற்றுக்கொடுக்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாட்டியின் குழப்பமும், கார்டு வேலை செய்தவுடன் அவர் காட்டிய மகிழ்ச்சியும் நெகிழ வைக்கிறது.

ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, பாட்டி முதன்முறையாக கீ கார்டைப் பயன்படுத்த முயன்ற தருணத்தை அவரது பேத்தி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். 'Diva Dadi' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடியோவில், பாட்டி கார்டைப் பார்த்து, 'இது எப்படி திறக்கும்? சாவி எங்கே?' என்று குழப்பத்துடன் கேட்கிறார்.

பேத்தி அந்த கார்டே சாவி என்று கூறியதும், அவர் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று கேட்கிறார். முதலில் கார்டை பூட்டின் மீது தேய்க்க முயன்ற அவர், பிறகு கார்டைத் தொட்டு வைக்கச் சொன்னவுடன், கார்டை ரீடரில் வைத்தார். கதவு திறந்தவுடன் பாட்டியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியான புன்னகை பார்ப்போரை கவரும் வகையில் இருந்தது.