பழைய அல்லது காலாவதியான நெயில் பெயிண்ட்டை வீணாக்காமல், அதை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். திருகுக்களை இறுக்கமாகவும், நகைக் கருப்பாவதைத் தடுக்கவும் இது உதவும்.
பெண்கள் தங்கள் நகங்களை அழகாக்க நெயில் பெயிண்ட் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நிறம் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது காலாவதி ஆகிவிட்டாலோ அவற்றை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால், இந்தச் சிறிய பாட்டில் உங்கள் வீட்டின் பல சிறிய வேலைகளை எளிதாக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
நெயில் பெயிண்ட்டைப் பயன்படுத்தி தளர்வான திருகுகளை (screws) இறுக்கமாகவும், துணிகளில் நூல் பிரிவதைத் தடுக்கவும் முடியும். மேலும், சாவிப் பெட்டிகளில் சாவிகளை எளிதில் அடையாளம் காணவும், செயற்கை நகைகள் கருப்பாவதைத் தவிர்க்கவும் இது பயன்படுகிறது. மரச்சாமான்களில் உள்ள சிறிய கீறல்களை மறைக்கவும் இது ஒரு சிறந்த தீர்வாகும்.