புதன் கிழமையன்று ஐடி பங்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வருகையால் பங்குச்சந்தை வலுவடைந்தது. சென்செக்ஸ் 889 புள்ளிகள் உயர்ந்து 77,654.60 ஆகவும், நிஃப்டி 1.10% உயர்ந்து 24,250.20 ஆகவும் முடிவடைந்தது.
ஐடி பங்குகள், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரத்து ஆகியவற்றால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய முக்கிய குறியீடுகள் புதன்கிழமை 1%-க்கும் மேல் உயர்ந்து காணப்பட்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 888.68 புள்ளிகள் அல்லது 1.16% உயர்ந்து 77,654.60 புள்ளிகளில் நிலைபெற்றது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 264.85 புள்ளிகள் அல்லது 1.10% உயர்ந்து 24,250.20 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் தொகுப்பில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் 4.70% மற்றும் இன்ஃபோசிஸ் 4.50% உயர்ந்தன. ட்ரெண்ட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவையும் லாபகரமான பங்குகளில் இருந்தன. இருப்பினும், அதானி போர்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் சரிவைச் சந்தித்தன.