மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தாராபித் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஐந்து பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபித் கோவில் அருகே அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த பக்தர்களில் குறைந்தது ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.