ராஜஸ்தான் ஜெய்சால்மர் ராணுவ நிலையத்திற்கு அருகே ஒட்டகத்துடன் மோதிய எஸ்யூவி வாகனம் ஐந்து முறை கவிழ்ந்ததில் இந்திய ராணுவ மேஜர் ஹம்சா ஆரிப் உயிரிழந்தார். இதில் மேலும் இரு லெப்டினன்ட்கள் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு ஜெய்சால்மர் ராணுவ நிலையத்திற்கு அருகே நடந்த கோர விபத்தில் 30 வயதுடைய இந்திய ராணுவ மேஜர் ஹம்சா ஆரிப் உயிரிழந்தார். ஒரு எஸ்யூவி வாகனம் திடீரென குறுக்கே வந்த ஒட்டகத்துடன் மோதி ஐந்து முறை கவிழ்ந்து சுமார் 100 மீட்டர் தூரம் நழுவியது. இந்த விபத்தில் ஒட்டகமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மேஜர் ஆரிப், ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். விபத்தில் சிக்கிய மற்ற இரு லெப்டினன்ட்கள் அபினவ் ரத்தோர் மற்றும் ஆயுஷ்மான் குசேன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.