2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மொபைல் எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படலாம். பதிலளிப்பவர்கள் தங்களின் அறிவு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த முறை மொபைல் எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு போன்ற தனிப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மக்கள்தொகை துறையின் இணையதளத்தில் 1872 முதல் 2011 வரையிலான முந்தைய கணக்கெடுப்பு வினாத்தாள்கள் உள்ளன. ஆனால், அந்த வினாத்தாள்களில் மக்களின் தனிப்பட்ட ஆவணங்கள் அல்லது வங்கி விவரங்கள் குறித்த கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.