'ஷ்ரத்தாஞ்சலி சமரோஹ்' நிகழ்வில் ராஜ்நாத் சிங் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1999-ல் இந்திய வீரர்கள் பனி மூடிய சிகரங்களையும் பாகிஸ்தான் படிகளின் இடைவிடாத துப்பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாமல் கார்கில் உயரங்களை மீட்டெடுத்த அந்தப் புகழ்பெற்ற வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

இந்தச் சிறப்புத் தருணத்தில் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி கார்கில் வீரர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.