புக்கெட்டிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கொந்தளிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 137 பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

புக்கெட்டிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆட்டோ-பைலட் சிஸ்டம் செயலிழந்ததுடன், ஹைட்ராலிக் சிஸ்டம் மூன்று முறை செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் இண்டிகேட்டர்கள் சரியாக இயங்கவில்லை.

விமானம் சுமார் 300 அடி தூரம் திடீரெனக் கீழ்நோக்கி சரிந்ததால் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் விமானியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அவருக்கு சைக்கோஆக்டிவ் மருந்துப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.