ஆப்பிள் பே சேவை அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகள் supported செய்யப்படும், ஆனால் UPI வசதி இருக்காது.
ஆப்பிளின் டிஜிட்டல் பேமெண்ட் சேவையான ஆப்பிள் பே, வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஆரம்பத்தில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற சர்வதேச கிரெடிட் கார்டுகளை மட்டுமே இது ஆதரிக்கும். பயனர்கள் தங்கள் கார்டுகளை ஆப்பிள் வேலட்டில் சேமித்து, NFC தொழில்நுட்பம் மூலம் கடைகளில் எளிதாக பணம் செலுத்த முடியும்.
ஆரம்பக்கட்டத்தில் UPI பரிவர்த்தனைகளுக்கு இதில் ஆதரவு இருக்காது, ஏனெனில் இதற்கு NPCI-ன் அனுமதி மற்றும் ஒரு ஸ்பான்சர் வங்கி தேவைப்படுகிறது. தற்போது வங்கிகளுடன் பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்து ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்பிள் பே-வின் வருகையால் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.