எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) திட்டத்தை விமர்சித்தவர்களை நோக்கி பாஜக எம்பி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைக்கவும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இது வாகன எஞ்சின்களைப் பாதிக்கும் என்று சில வல்லுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த பாஜக எம்பி ஒருவர், 'தூய பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்து வருமா?' என்று ஆக்ரோஷமாகக் கேட்டுள்ளார். அவரது இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.