இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையை ஒட்டிய டங்கல் பூங்காவில் இந்திய ராணுவ வீரர்கள் 21 துப்பாக்கி மரியாதை ஒத்திகையை மேற்கொண்டனர்.

ஆகஸ்ட் 15-க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தின விழா 'இளைஞர் சக்தி' மற்றும் 'Gen-Z' தலைமுறையினரின் சாதனைகளை மையமாகக் கொண்டு அமையும். மேலும், 'விக்சித் பாரத் 2047' நோக்கிய இந்தியாவின் முன்னேற்றம் இதில் காட்சிப்படுத்தப்படும்.

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு இந்த ஆண்டு கொண்டாடப்படுவதால், அதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகளும் காட்சிப்படுத்தப்படும்.

சர்வதேச ஒலிம்பியாட்களில் பதக்க வென்ற 19 மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்படுவார்கள். நீர் பாதுகாப்பு விழிப்புணர்விற்காக, அமரும் இடங்கள் இந்தியாவின் முக்கிய ஏரிகளின் பெயர்களில் பெயரிடப்பட்டுள்ளன.